மத்திய பிரதேசம்: ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி


மத்திய பிரதேசம்:  ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
x

மத்திய பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோன்று, 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கான மாத தவணை தொகையை ஆகார அனுதன் யோஜ்னா திட்டத்தின் கீழ் விடுவிக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், மத்திய பிரதேசத்திற்கு மேற்கொள்ளும் இந்த பயணம், வளர்ச்சிக்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

ஜபுவாவில் மதியம் 12.40 மணியளவில் பல வளர்ச்சி பணிகளுக்கான தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதில், பழங்குடி பெண் பயனாளிகள், உணவு மானியத்திற்கான மாத தவணை தொகையை பெறும் வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

அவருடைய இந்த பயணத்தில், நீர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டவுள்ளார். ரெயில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் பயண நேரம் குறையும் வகையிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.


Next Story