ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு


ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு
x
தினத்தந்தி 28 Dec 2023 1:22 AM GMT (Updated: 28 Dec 2023 6:20 AM GMT)

அரசியலையும், மதத்தையும் கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ஜனவரி 22-ந் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு வந்தது. ஆனால் அவர் பங்கேற்க மாட்டார் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரசியலையும், மதத்தையும் கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ராமர் கோவில் திறப்புவிழாவில், மம்தா பானர்ஜியோ, மேற்கு வங்காள அரசு அல்லது திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலோ யாரும் பங்கேற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story