மராட்டியம்: ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்..!
மராட்டியத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சிதாபுல்டி பகுதியைச் சேர்ந்த தரேந்திர சிங் கவுர் (வயது 57) என்பவர், சோம்வார் பஜார் சாலையில் வசிக்கும் ரவீந்திர பவாங்கர் (வயது 53) என்பவரிடம் மூத்த ரெயில்வே அதிகாரிகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அதன் மூலம் பவாங்கரின் இரண்டு மகன்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
தரேந்திர சிங் கூறியதை நம்பிய, பவாங்கர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 10 லட்சத்தை தரேந்திர சிங்குக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவீந்திர பவாங்கர் போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஐபிசி பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) ஆகியவற்றின் கீழ் தரேந்திர சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.