மராட்டியம்; உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத் தூள் பறிமுதல்

image courtesy; ANI
உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத் தூளை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின் போது சிங்கப்பூரில் இருந்து வந்த இந்திய குடும்பத்தினரிடம் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்களின் உடைகளை சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பயணிகளும் தங்கள் உள்ளாடை மற்றும் அவர்களுடைய மூன்று வயது குழந்தையின் டயப்பரில் மறைத்து வைத்து 2 கிலோ எடையுள்ள தங்கத் தூளை கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து தங்கத் தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






