பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகை


பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகை
x

சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு:

சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

17 கம்பெனி வீரர்கள் வருகை

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும், அமைதியான முறையில் தேர்தலை நடத்தவும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 17 கம்பெனி மத்திய போலீஸ் படை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

அதாவது 12 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், 5 கம்பெனி அதிவிரைவு படை வீரர்களும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். பெங்களூருவில் மக்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் விதமாக நகர போலீசாருடன் இணைந்து முக்கிய பகுதிகளில் அணிவகுப்பு நடத்த உள்ளனர்.

முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு

இதுதவிர பெங்களூருவில் பதற்றமான பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சாந்திநகர், சிக்பேட்டை, கோரிபாளையா, மரளுதின்னே, குட்ஷெட் காலனி, பி.எச்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 160 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் துமகூரு, பெலகாவி, கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story