இமாசலபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.5 ஆக பதிவு


இமாசலபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.5 ஆக பதிவு
x

மாநில தலைநகரான சிம்லாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் பதிவானது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. காலை 5.40 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

லேசான இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மாநில தலைநகரான சிம்லாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.


Next Story