மராட்டிய மாநிலத்தில் போலீஸ் எனக்கூறி மைனர் பெண்ணுக்கு 2 நபர்கள் பாலியல் வன்கொடுமை


மராட்டிய மாநிலத்தில் போலீஸ் எனக்கூறி மைனர் பெண்ணுக்கு 2 நபர்கள் பாலியல் வன்கொடுமை
x

போலீஸ் எனக்கூறி மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டாம்பிவில்லி பகுதியில், 17 வயது பெண் ஒருவர், தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த போது, அவர்களை இரண்டு நபர்கள் வழிமறித்து அந்த பகுதியில் நடமாடக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

மேலும் அந்த நபர்கள் தங்களை போலீஸ் எனக் கூறிக் கொண்டதாகவும், அந்த மைனர் பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் தங்கள் செல்போனில் படமெடுத்து வெளியில் எதையும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 2 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story