பா.ஜனதா எம்.எல்.ஏ., இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பு


பா.ஜனதா எம்.எல்.ஏ., இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பு
x

புத்தூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படம் சித்தரிக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மங்களூரு:

புத்தூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படம் சித்தரிக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 2 கட்டமாக 166 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த தேர்தலில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள பலருக்கு மீண்டும் பா.ஜனதா வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக பா.ஜனதாவை சேர்ந்த சஞ்சீவ மடந்தூருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

இளம்பெண்ணுடன் நெருக்கமாக...

இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சஞ்சீவ மடந்தூர் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது, சஞ்சீவ மடந்தூர், இளம்பெண்ணை கட்டிப்பிடித்தப்படி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த பலர், சஞ்சீவ மடந்தூருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் சஞ்சீவ மடந்தூர் இக்கட்டில் சிக்கி உள்ளார். இதனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

போலீசில் புகார்

இந்த நிலையில், இதனை மறுத்துள்ள சஞ்சீவ மடந்தூர், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படத்தில் இருப்பது தான் இல்லை என்று தெரியவந்துள்ளார். மேலும், இளம்பெண்ணுடன் தான் இருப்பது போன்று எனது முகத்தை சித்தரித்து (மார்ப்பிங்) செய்து வெளியிட்டுள்ளனர். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விஷமிகள் முயற்சி செய்கிறார்கள் என்றார்.

மேலும் இதுகுறித்து அவர் உப்பினங்கடி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் இளம்பெண்ணுடன் தான் இருப்பது போன்று சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story