பணமோசடி வழக்கு; அரியானா, உத்தர பிரதேசத்தில் 13 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை


பணமோசடி வழக்கு; அரியானா, உத்தர பிரதேசத்தில் 13 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை
x

பொதுமக்களின் பணம் ரூ.55 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்தது.

புதுடெல்லி,

அரியானாவின் யமுனாநகரில் உள்ள காவல் நிலையத்தில் பணமோசடி வழக்கு தொடர்புடைய 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. பெரிய அளவிலான அரசு நிதியை, அரசு கணக்குகளில் இருந்து, பலன் பெறுவோர் அல்லாத நபர்களின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

எப்.ஐ.ஆர்.களின் அடிப்படையில் அமலாக்க துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதில், பொதுமக்களின் பணம் ரூ.55 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்தது.

இதற்காக அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 13 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. 4 என்ஜினீயர்கள், 2 மண்டல கணக்கியலாளர்கள் மற்றும் பிற அரசு பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், டிஜிட்டல் உபகரணங்கள், அசையா சொத்துகளுடன் தொடர்புடைய ஆவணங்கள், நிலையான வைப்பு நிதிகள், வங்கி லாக்கர்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.27.50 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story