உருட்டுகட்டையால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை


உருட்டுகட்டையால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை
x

குடிபோதையில் கள்ளக்காதலியை உருட்டுகட்டையால் தாக்கி கொன்ற கட்டிட தொழிலாளியை சூரியாநகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆனேக்கல்:

குடிபோதையில் கள்ளக்காதலியை உருட்டுகட்டையால் தாக்கி கொன்ற கட்டிட தொழிலாளியை சூரியாநகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல்

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மாதம்மா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம்மாவின் கணவன் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி பெங்களூருவுக்கு வந்தார். ஆனேக்கல் சூரியாநகர் லட்சுமிசாகர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்தார்.

அப்போது மாதம்மாவுக்கு, அவருடன் வேலை பார்த்த முனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அதேபோல இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் குடித்துவிட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.

அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல குடிபோதையில் இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த முனி வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து மாதம்மாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதை பார்த்த முனி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி சூரியாநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூரியாநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரியாநகர் போலீசார் தலைமறைவான முனியை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story