கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் பெண் அடித்து கொலை?


கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் பெண் அடித்து கொலை?
x

கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் ஆத்திரத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார், அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவனஹள்ளி:

கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் ஆத்திரத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார், அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பு

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா ஜெயமகால் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி. தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் லட்சுமிபதிக்கும், விஜயப்புரா டவுன் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுகுறித்து அறிந்த ஜெயந்தி, கணவரை கண்டித்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. ஒருகட்டத்தில், வரதட்சணை வாங்கி வரும்படி கூறி, தனது மனைவியை லட்சுமிபதி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஜெயந்தி மனமுடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று, கள்ளத்தொடர்பு குறித்து ஜெயந்தி, தனது கணவரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமிபதி, தனது மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது மனைவியின் உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

வழக்குப்பதிவு

இதுபற்றி அறிந்த விஜயப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஜெயந்தியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது தெரிந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். மேலும் ஜெயந்தியின் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story