கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை; பேரன் கைது


கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை; பேரன் கைது
x

மண்டியாவில் சொத்து தகராறில் கல்லால் தாக்கி மூதாட்டியை படுகொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

மண்டியா:

மண்டியாவில் சொத்து தகராறில் கல்லால் தாக்கி மூதாட்டியை படுகொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கே.எம்.தொட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட அன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கெம்பம்மா (வயது 75). இவரது பேரன் சித்தராஜ். இந்த நிலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக கெம்பம்மா மற்றும் சித்தராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் சொத்து பிரச்சினை தொடர்பாக கெம்பம்மா, சித்தராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சித்தராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து பாட்டி என்று கூட பாராமல் கெம்பம்மாவை சித்தராஜ் சரமாரியாக தாக்கினார். அப்போது சித்தராஜின் மனைவி அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் சித்தராஜ் தாக்கினார். இதில், கெம்பம்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், சித்தராஜை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது சித்தராஜ், மது போதையில் இருந்தது தெரியவந்தது.

பேரன் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.எம்.தொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்தப்பகுதி மக்கள் சித்தராஜை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் பாட்டியை பேரனே கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையான கெம்பம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சித்தராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story