பிஎப்ஐ பயங்கரவாதத்தை பரப்பிக்கொண்டிருந்தது - உள்துறை மந்திரி அமித்ஷா


பிஎப்ஐ பயங்கரவாதத்தை பரப்பிக்கொண்டிருந்தது - உள்துறை மந்திரி அமித்ஷா
x

தடைசெய்யப்பட்ட அமைப்பான பிஎப்ஐ நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பிக்கொண்டிருந்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி,

2006-ம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல், சட்டவிரோத பண பரிவர்த்தனை, வெளிநாட்டு நிதி, கொலை, மத கலவரம், வெறுப்புணர்வு, வன்முறையை ஏற்படுத்தல் உள்பட பல்வேறு புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. 5 ஆண்டுகள் இந்த தடை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்தார். அப்போது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியையும், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ இயக்கத்தையும் ஒப்பிட்டு பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தற்கு பதிலளித்த அமித்ஷா, நான் பிஎப்ஐ-யும் காங்கிரசும் ஒன்று தான் என்று கூறவில்லை. பிஎப்ஐ மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிஎப்ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப்பெற்றது. நாங்கள் அதை தடுக்க முயற்சித்தோம். இதில் கவலைப்பட என்ன உள்ளது?

நாங்கள் வெற்றிகரமாக பிஎப்ஐ அமைப்பை தடை செய்துவிட்டோம். பிஎப்ஐ மதமாற்றம், பயங்கரவாதத்தை பரப்புகிறது என நான் நம்புகிறேன். பயங்கரவாத செயலுக்கான மூலப்பொருட்களை தயாரிக்க பிஎப்ஐ முயற்சிக்கிறது.

நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பல்வேறு செயல்களில் பிஎப்ஐ மேற்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பிஎப்ஐ தடை அரசியலுக்கு அப்பாற்பட்டது' என்றார்.

1 More update

Next Story