அருணாசலபிரதேச எல்லைக்கு அமித்ஷா பயணம் - சீனா எதிர்ப்பு


அருணாசலபிரதேச எல்லைக்கு அமித்ஷா பயணம் - சீனா எதிர்ப்பு
x

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அருணாசல பிரதேச எல்லைப்பகுதிக்கு சென்றார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இடாநகர்,

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அருணாசல பிரதேச எல்லை விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையாக நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினையை மேலும் நீட்டிக்கும் வகையில், அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சமீபத்தில் பெயர் மாற்றியுள்ளது. அங்குள்ள இடங்களுக்கு சீனப்பெயர் சூட்டப்படுவது இது 3-வது முறையாகும்.

சீனாவின் இந்த அத்துமீறலை இந்தியா வன்மையாக கண்டித்து இருந்தது. சீனாவின் இந்த அப்பட்டமான விதிமீறலை நிராகரிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

மேலும் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது இருக்கிறது. எப்போதும் இருக்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

அமித்ஷா பயணம்

இவ்வாறு அருணாசல பிரதேச விவகாரம் இந்தியா-சீனா இடையே மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், அந்த மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்றார்.

அங்கு சீன எல்ைலயை ஒட்டியுள்ள கிபிதூ கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு 'துடிப்பான கிராமங்கள் திட்டத்தை' தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சீனா எதிர்ப்பு

அமித்ஷாவின் இந்த அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'சாங்னன் (அருணாசல பிரதேசத்தின் சீன பெயர்), சீனாவின் பிராந்தியம். இந்த பகுதியில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள், சீனாவின் இறையாண்மைைய மீறுவதாகும். இது எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்தது அல்ல. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.


Next Story