செவ்வாய் கிழமையில் அசைவம்...? தம்பதி இடையே தகராறு; தடுத்த நபருக்கு நேர்ந்த கதி


செவ்வாய் கிழமையில் அசைவம்...? தம்பதி இடையே தகராறு; தடுத்த நபருக்கு நேர்ந்த கதி
x

மத்திய பிரதேசத்தில் செவ்வாய் கிழமையில் அசைவம் சமைப்பதில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க வந்த அண்டை வீட்டுக்காரர் அடித்து, கொல்லப்பட்டார்.



போபால்,


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வசித்து வருபவர் பப்பு அகிர்வார். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் பில்லு. இந்த நிலையில், பப்புவின் வீட்டில் செவ்வாய் கிழமையன்று அசைவம் சமைப்பதில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

பொதுவாக, செவ்வாய் கிழமை மங்களகரம் வாய்ந்த நாள் என்பதற்காக இந்துக்கள் அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதில்லை. இதனால், கணவன் மற்றும் மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. அசைவம் சமைக்க பப்புவின் மனைவி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், தம்பதி இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. ஒரே கூச்சலாக இருக்கிறது, என்பதற்காக அண்டை வீட்டுக்காரரான பில்லு, அவர்கள் வீட்டுக்கு சென்று இருவருக்கு இடையேயான மோதலை தடுத்து நிறுத்தி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

ஒரு வழியாக குடும்ப சண்டையை நிறுத்தி விட்ட மகிழ்ச்சியில் பில்லு இருந்த நிலையில், அசைவம் சமைப்பதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் சண்டையால் ஆத்திரத்தில் இருந்த பப்பு, பில்லுவின் வீட்டுக்கு சென்று அவரை சாகும் வரை அடித்து உள்ளார்.

இதில், பில்லு உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பப்புவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story