ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் குஜராத், இமாசலபிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரவிந்த் கெஜ்ரிவால்


ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் குஜராத், இமாசலபிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரவிந்த் கெஜ்ரிவால்
x

ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை குறிப்பிட்டு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை முதல்-மந்திரி பகவந்த் மான் நிறைவேற்றி இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துகள். புதிய ஓய்வூதிய திட்டம் நியாயமற்றது. நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தல் நடக்க உள்ள குஜராத், இமாசலபிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், அங்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story