மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்... பிகாரில் பரபரப்பு...!


மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்... பிகாரில் பரபரப்பு...!
x

Image Credits : ANI News

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பழைய விமானம் அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பீகார்,

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட பழைய விமானம் பீகார் அருகே மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பழைய விமானம் லாரி மூலம் அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பீகார் மாநிலம் மோதிகாரி அருகே அந்த விமானம் சென்ற போது பிப்ரகோதி எனப்படும் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கி கொண்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் லாரி ஓட்டுனர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விமானம் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேம்பாலத்தின் உயரத்தை ஓட்டுநர் சரியாக கணிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story