இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை


இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை
x

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பிரதமர் மோடி எகிப்து அதிபர் அப்தெல் அல்-சிசி உடன் தொலைபேசியில் பேசினார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி, எகிப்து அதிபர் அப்தெல் அல்-சிசி உடன் தொலைபேசியில் போர் குறித்து பேசினார்.

இந்த உரையாடலில் இரு நாட்டு தலைவர்களும் மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் மனிதத்துவ சூழல் குறித்து விவாதித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில்,

"மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் மனிதத்துவ சூழல் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். பயங்கரவாதம், வன்முறை மற்றும் மக்களின் உயிரிழப்பு தொடர்பான கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். விரைவில் அமைதி, நிலையான சூழலை உருவாக்கவும், மனிதத்துவ உதவிகள் செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்தையும் உடன்பாடு கொண்டிருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

காசாவில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாக எகிப்து அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Next Story