மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்..!
ரூ.26 ஆயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் செல்கிறார். அங்கு அவர், சுமார் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி ராஜஸ்தானில் ரூ.7 ஆயிரம் கோடி மற்றும் மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தானில் ரூ.1,480 கோடி மதிப்பில் உருவாகியுள்ள தாரா-ஜலவர்-தீன்தர் 4 வழிச் சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கோட்டாவில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதேபோல மத்திய பிரதேசத்தில் ரூ.11,895 கோடியில் டெல்லி-வதோதரா விரைவுச்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.1,880 கோடி மதிப்பில் 5 சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.