மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
மம்தா பானர்ஜிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story