டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது: மத்திய மந்திரிகள் புகழாரம்


டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது: மத்திய மந்திரிகள் புகழாரம்
x

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது என்று மத்திய மந்திரிகள் புகழாரம் சூட்டினர்.

புதுடெல்லி,

ஜெய்சங்கர்

சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி 10-வது தடவையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார்.

அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியின் உரை உத்வேகம் அளிப்பதாக இருந்தது. சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் இந்தியாவின் இலக்குகளை அவர் பட்டியலிட்டார்.

மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்ைம ஆகிய 3 அம்சங்களை உயர்த்தி பிடித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 'உலக நண்பன்' ஆக உருவெடுத்ததாக தெரிவித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

நிதின் கட்காரி

மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியிருப்பதாவது:-

இந்தியாவை உலகின் முதன்மை இடத்துக்கு கொண்டு செல்ல பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். நாம் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு. பொருளாதாரத்தில் நாம் 3-வது இடத்தை அடைய வேண்டும்.

எனவே, இந்தியாவை உலகின் 'சூப்பர் பவர்' ஆக்க கடுமையாக உழைப்போம் என்றும், அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என்றும் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

கிரண் ரிஜிஜு

சுதந்திர தின விழாவில், தான் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, ''பிரதமர் மோடி வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றி உள்ளார்'' என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் துஷ்யந்த் கவுதம், ''கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு தரப்பினருக்கு ஆற்றிய பணிகளால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பிரதமர் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story