குடிபோதையில் லாரி டிரைவரிடம் மாமூல் கேட்ட வனத்துறை அதிகாரி


குடிபோதையில் லாரி டிரைவரிடம் மாமூல் கேட்ட வனத்துறை அதிகாரி
x

குடிபோதையில் லாரி டிரைவரிடம் வனத்துறை அதிகாரி ஒருவர் மாமூல் கேட்ட சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் நடந்துள்ளது.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்டம் கர்நாடகா-தமிழக எல்லைப்பகுதியான பாலாறு பகுதியில் மலைமாதேஸ்வரா சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியாற்றி வருபவர் வனத்துறை அதிகாரி மோகன். இவர் பாலாறு-மலை மாதேஸ்வரா சோதனை சாவடி வழியாக வரும் லாரி டிரைவர்களிடம் பணம் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதேபோன்று கர்நாடகத்திற்கு வந்த லாரி டிரைவரை வழிமறித்து மாமூல் கேட்டுள்ளார். டிரைவர், ரூ.30 கொடுத்தார்.


ஆனால் மோகன் அதை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக ரூ.100 அல்லது ரூ.200 வழங்கும்படி கூறினார். இதற்கு டிரைவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் கோபமடைந்த மோகன், டிரைவர் மற்றும் கிளினரிடம் பணம் கொடுக்கவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டினார். அப்போது வனத்துறை அதிகாரி மோகன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனை லாரி டிரைவர், கிளினர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

1 More update

Next Story