இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்


இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
x

மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கனகபுரா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராமநகர்:

மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கனகபுரா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மர்மசாவு

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் இத்ரேஷ் பாஷா (வயது 45). மாட்டு வியாபாரி. இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சாத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இத்ரேஷ் பாஷாவை, இந்து அமைப்பின் தலைவர் புனித் கெரேஹள்ளி அடித்துக் கொலை செய்ததாக சாத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இத்ரேஷ் பாஷாவிடம், புனித், அவரது ஆதரவாளர்கள், ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதனை கொடுக்காததால் அவரை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த புனித் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடிவந்தனர். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் புனித், ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் பதுங்கி இருந்த புனித் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்தனர்.

7 நாட்கள் காவல்

இந்த நிலையில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட புனித், கோபி, பவன் குமார், அம்பிகர் மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் ராமநகருக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கனகபுரா முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், மாட்டு வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு கோரினர். இதையடுத்து நீதிபதி, கொலை வழக்கு தொடர்பாக இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.


Next Story