பெங்களூருவில் போலீசாருக்கு தனியாக கியூஆர் கோடு அறிமுகம்
பெங்களூரு தென் கிழக்கு மண்டலத்தில் முதல் முறையாக போலீசாருக்கு என்று தனியாக கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அதை போலீசார் எடுக்காவிட்டால், அவர்கள் மீது துணை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு தென் கிழக்கு மண்டலத்தில் முதல் முறையாக போலீசாருக்கு என்று தனியாக கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அதை போலீசார் எடுக்காவிட்டால், அவர்கள் மீது துணை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.
கியூஆர் கோடு திட்டம்
பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சி.கே.பாபா. இவர், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்புறவு இருக்க வேண்டும் என்பதற்காக புதிய கியூஆர் கோடு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதாவது தென்கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, பொதுமக்கள் தொடர்பு கொண்டு ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால், போலீசார் செல்போனை எடுத்து பேசுவதில்லை என்ற புகார்கள் வந்தது.
இதையடுத்து, இந்த கியூஆர் கோடு திட்டத்தை துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதற்கு லோக ஸ்பந்தனா என்று பெயர் வைத்திருக்கிறார். அதன்படி, தென்கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் ஒவ்வொரு போலீசாரும் தங்களது வாட்ஸ்-அப்பின் முகப்பில் இந்த கியூஆர் கோடை தான் வைக்க வேண்டும்.
போலீசார் மீது நடவடிக்கை
தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள போலீசாருக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக எடுத்து மக்களின் பிரச்சினைகள், புகார் குறித்து கேட்டு, அதற்கு போலீசார் தீர்வு காண முன்வர வேண்டும். போலீசார் பொதுமக்களின் அழைப்பை எடுத்து பேசாமல் இருந்தால், அந்த போலீசாரின் வாட்ஸ்-அப் முகப்பில் உள்ள கியூஆர் கோடை மக்கள் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அவ்வாறு ஸ்கேன் செய்தால், துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபாவின் செல்போனுக்கு நேரடியாக சம்பந்தப்பட் போலீசார், பொதுமக்களின் புகாரை பெறவில்லை என்று தகவல் சென்று விடும். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது துணை கமிஷனர் சி.கே.பாபா நடவடிக்கை எடுப்பார். இந்த கியூஆர் கோடு திட்டம் மூலமாக போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நட்புறவு ஏற்படும் என்றும், மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா தெரிவித்துள்ளார்.