'இந்தியாவின் தலைவிதியையே பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' - ஜே.பி.நட்டா பேச்சு
மோடி பிரதமரான பிறகு தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
அகர்தலா,
திரிபுரா மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மானிக் சாஹா, மாநில பா.ஜ.க. தலைவர் ரஜிப் பட்டாச்சார்ஜி ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து திரிபுராவின் சன்டிர்பஜார் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அமைத்த பிறகு, அதற்கு முன் இருந்த ஊழல் நிறைந்த, திறமையற்ற ஆட்சிக்கு முடிவு கட்டியது. மோடி பிரதமரான பிறகு தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் தலைவிதியையே பிரதமர் மோடி மாற்றிவிட்டார்."
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
Related Tags :
Next Story