மத்தியபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!


மத்தியபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!
x

கோப்புப்படம் 

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

போபால்,

மத்திய பிரதேச மாநில தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி போபாலில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபாலில் இன்று பா.ஜ.க. சார்பில் கார்யகா மஹா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போபாலின் ஜம்போரி மைதானத்தை அடைந்தார். பின்பு அவர் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்றார்.

சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா ஆகியோரும் வந்தனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார்.

முன்னதாக கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மத்தியபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story