அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை இறந்ததால் பரபரப்பு...

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை இறந்ததால் பரபரப்பு...
x
தினத்தந்தி 10 Jun 2023 2:54 AM IST (Updated: 10 Jun 2023 2:47 PM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. இதனால் குடும்பத்தினர் ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி டாக்டர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

பிரசவம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா சீதேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முகமது சலீம். இவரது மகள் ஒமிரா தாஜ்(வயது30). நிறை மாத கர்ப்பிணியான இவர் நேற்று பிரசவத்திற்காக பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பிரசவ வலியால் துடித்த ஒமிரா தாஜை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து ஒமிரா தாஜை பிரசவத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஒமிரா தாஜ் வலியால் துடித்துக்கொண்டிருந்தார்.

தர்ணா போராட்டம்

பின்னர் ஒரு வழியாக டாக்டர்கள் ஒமிரா தாஜுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதனால் ஆவேசம் அடைந்த ஒமிரா தாஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி எதிரே திரண்டனர். பின்னர் அவர்கள், குழந்தை இறந்ததற்கு டாக்டர்களின் அலட்சியப்போக்கு தான் காரணம் என குற்றம்சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பங்காருபேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் டாக்டர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story