மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
மராட்டிய மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம், அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் பணி ஆகியவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story