அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் - ராகுல்காந்தி


அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் - ராகுல்காந்தி
x

பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று, அதானிக்கானது. மற்றொன்று, ஏழைகளுக்கானது என்று ராகுல்காந்தி கூறினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, புந்தி நகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று, அதானிக்கானது. மற்றொன்று, ஏழைகளுக்கானது. அதானிக்காக அவர் 24 மணி நேரமும் உழைக்கிறார். 'பாரத்மாதா கி ஜே' என்று கோஷமிடுவதற்கு பதிலாக, 'அதானி கி ஜே' என்று அவர் கோஷமிட வேண்டும்.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர்தான் பாரதமாதா. அவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்போதுதான், 'பாரதமாதாவுக்கு ஜே' என்பதில் அர்த்தம் இருக்கும்.

பிரதமர் மோடி என்ன ஆனாலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார். காங்கிரசும், ராகுல்காந்தியும்தான் அதை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story