நேபாளத்தில் இருந்து வந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு - உ.பி.யைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை


நேபாளத்தில் இருந்து வந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு - உ.பி.யைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 65,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

லக்னோ,

இந்தியா-நேபாளத்தின் எல்லையில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இரண்டு மைனர் பெண்கள் சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக வந்த போது, அவர்களை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி ஹரயா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ராம்சந்திர பஸ்வான், ராஜேந்திர பஸ்வான், ராகேஷ் பஸ்வான் மற்றும் பிண்ட்டு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பல்ராம்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜஹெந்த் பால் சிங், குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 65,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதே போல் மற்றொரு நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story