ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்பும் திட்டம் - டெல்லி துணை நிலை கவர்னர் அனுமதி அளிக்க கெஜ்ரிவால் கோரிக்கை


ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்பும் திட்டம் - டெல்லி துணை நிலை கவர்னர் அனுமதி அளிக்க கெஜ்ரிவால் கோரிக்கை
x

ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்பும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா மறுப்பு தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக வி.கே.சக்சேனா அளித்த விளக்கத்தில், செலவினங்களை குறைப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், ஆசிரியர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி வழக்குவது குறித்து டெல்லி அரசு திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை கவர்னருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 36 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், வரும் 6-ந்தேதி சிங்கப்பூருக்கு சென்று 5 நாட்கள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயிற்சிக்காக வெளிநாடு செல்வதை மேற்கோள் காட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே டெல்லி அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாகவும், இதனை துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் விரைவில் இதற்கான அனுமதியை வி.கே.சக்சேனா வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story