ரூ.5 கோடி மோசடி வழக்கில் மடாதிபதி முன்ஜாமீன் கேட்டு மனு


ரூ.5 கோடி மோசடி வழக்கில் மடாதிபதி முன்ஜாமீன் கேட்டு மனு
x

ரூ.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மடாதிபதியின் முன்ஜாமீன் மனுவை 19-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ரூ.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மடாதிபதியின் முன்ஜாமீன் மனுவை 19-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

7 பேர் கைது

உடுப்பியை சேர்ந்தவர் கோவிந்தபாபு பூஜாரி. தொழில் அதிபர். இவருக்கு பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து அமைப்பு பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா உள்பட 7 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி விவகாரத்தில் விஜயநகர் மாவட்டம் காலு மடத்தின் மடாதிபதி அபினவ காலஸ்ரீயின் பெயர் சேர்க்கப்பட்டது. விசாரணையில் மோசடியில் கிடைத்த பணத்தில் இவருக்கு ரூ.1½ கோடி பங்கு கொடுக்கப்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி அவர் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே மடாதிபதி தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

விசாரணை ஒத்திவைப்பு

இதற்கிடையில், தலைமறைவான மடாதிபதி அபினவ காலஸ்ரீ, தொழில் அதிபர் மோசடி வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.

பின்னர் கூறுகையில் மடாதிபதியின் முன்ஜாமீன் மனு மீது போலீஸ் தரப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு கூறினார். மேலும் அந்த மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே ஆந்திராவில் பதுங்கி இருந்த மடாதிபதியின் கார் டிரைவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story