விளையாட்டு கற்றுத்தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை


விளையாட்டு கற்றுத்தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
x

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் சம்பவம் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி (வயது 25).

இவர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம் வரைவது பற்றியும், விளையாட்டுகளை கற்றுக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி அவர் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அவர் தன்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சில மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டியும் வந்துள்ளார். அவரது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் சம்பவம் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

அதன்பேரில் பெற்றோர்கள், மேல்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் யோகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1 More update

Next Story