எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்..!


எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்..!
x

இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்.

பெங்களூரு,

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரத்தில் நேற்று முதல் நாள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்றனர்.

2 நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் விருந்தில் பங்கேற்றனர் . இன்று ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்.


Next Story