குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x

இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காந்திநகர்,

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத்தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றினர். குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடலோர காவல்படை சோதனையில் இதுவரை ரூ.3,135 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story