காங்கிரஸ் கட்சியில் சேர திட்டமா?; முன்னாள் மந்திரி சோமண்ணா பதில்


காங்கிரஸ் கட்சியில் சேர திட்டமா?; முன்னாள் மந்திரி சோமண்ணா பதில்
x

காங்கிரசில் சேர திட்டமா என்பது குறித்து முன்னாள் முதல்-மந்திரி சோமண்ணா பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா முன்னாள் மந்திரி சோமண்ணா, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சோமண்ணாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பா.ஜனதாவில் இருந்து விலகுவது குறித்தோ, காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்தோ இதுவரை யோசித்தது கூட இல்லை. அதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்தும் எனக்கு சரியான தகவல்கள் வரவில்லை. எனவே அதுபற்றி பேச விரும்பவில்லை.

பா.ஜனதா தேசிய தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதும் தெரியவில்லை. மாநில அரசியல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள், பிரச்சினைகள் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். அந்த பிரச்சினைகளை கட்சி தலைவர்கள் சரி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரச்சினைகளை சரி செய்யாவிட்டாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story