யஷ்வந்தபுரம்-பெலகாவி இடையே சிறப்பு ரெயில்; தென்மேற்கு ரெயில்வே தகவல்


யஷ்வந்தபுரம்-பெலகாவி இடையே சிறப்பு ரெயில்; தென்மேற்கு ரெயில்வே தகவல்
x

தீபாவளியையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் யஷ்வந்தபுரம்-பெலகாவி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளியையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் யஷ்வந்தபுரம்-உப்பள்ளி, யஷ்வந்தபுரம்-பெலகாவி, யஷ்வந்தபுரம்-சிவமொக்கா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி வருகிற 21-ந் தேதி(அதாவது நாளை) யஷ்வந்தபுரம்- உப்பள்ளி இடையே சிறப்பு ரெயில்(06271) இயங்குகிறது. யஷ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.50 மணிக்கு உப்பள்ளிக்கு செல்கிறது. மறுமார்க்கமாக 22-ந் தேதி உப்பள்ளியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.50 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடைகிறது. யஷ்வந்தபுரம்-பெலகாவி இடையே 21 மற்றும் 22-ந் தேதிகளில் சிறப்பு ரெயில்(06505) இயங்குகிறது. யஷ்வந்தபுரத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 9.25 மணிக்கு பெலகாவி செல்கிறது. மறுமார்க்கமாக பெலகாவியில் இருந்து 22-ந் தேதி காலை 11.10 மணிக்கு புறப்படும் ரெயில்(06506) அன்று இரவு 10 மணிக்கு யஷ்வந்தபுரம் வருகிறது. யஷ்வந்தபுரம்-சிவமொக்கா இடையே 22-ந் தேதி சிறப்பு ரெயில்(06507) இயங்குகிறது. காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.30 மணிக்கு சிவமொக்கா செல்கிறது.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.


Next Story