இந்தியா கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை- பிரதமர் மோடி தாக்கு


இந்தியா  கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை- பிரதமர் மோடி தாக்கு
x

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது என்று மோடி கூறினார்.

கயா,

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பீகாரின் கயா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி பேசியதாவது:

பா.ஜனதா தலைமையிலான அரசு எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. அதன் காரணமாகத்தான், நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மோடியின் உத்தரவாத அட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. இந்தியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை" என்றார்.

1 More update

Next Story