மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு


மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x

குனே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை-புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story