தெலுங்கானா சட்டசபை தேர்தல் : ஐதராபாத்தில் நவ.29, 30 தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை


தெலுங்கானா சட்டசபை தேர்தல் : ஐதராபாத்தில் நவ.29, 30 தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
x

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஐதராபாத்தில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி கூறுகையில், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அவர் கூறியுள்ளார். இந்த பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story