உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன


உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன
x

உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு கொண்டு வரப்பட்டன.

பீதர்:

உத்தர பிரதேச மாநிலம் பாராய்ச்-லகிம்பூர் நெடுஞ்சாலையில் நானிகா சந்தை அருகே நேற்று முன்தினம் சுற்றுலா மினி பஸ், லாரி மோதிய விபத்தில் மினி பஸ்சில் சென்ற கர்நாடக மாநிலம் பீதரை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். இதில் 7 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் 4 ஆம்புலன்சுகள் மூலம் உத்தரபிரதேசத்தில் இருந்து நேற்று சொந்த ஊரான பீதருக்கு கொண்டு வரப்பட்டது. பலியான 7 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மினி பஸ் டிரைவர் கலபுரகியை சேர்ந்தவர் என்பதால் பீதரில் இருந்து கலபுரகிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.


Next Story