திருவனந்தபுரம்: துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கேரளா ஐகோர்ட் இன்று விசாரணை


திருவனந்தபுரம்: துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கேரளா ஐகோர்ட் இன்று விசாரணை
x

திருவனந்தபுரத்தில் புதிதாக துறைமுகம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் அருகே புதிய துறைமுகம் அமைக்கும் பணியில் அதானி குரூப் ஆப் கம்பெனி ஈடுபட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநில அரசு அங்கு புதிய துறைமுகம் அமைக்கும் பணியை அதானி குழுமத்திற்கு வழங்கியிருந்தது.

இதற்கான பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் அங்கு துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த கோரியும் பணியை தொடர விடாமலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக ஒப்பந்ததாரரை பணி செய்ய விடாமல் அங்கு துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் போராட்டத்தால் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதானி குழுமம் கேரள ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

அதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வு நீதிபதி துறைமுகம் அமைக்கும் பணிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்றும், அதற்கு மாநில அரசும், துறைமுக ஆணையமும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரளா நீதிபதி அனு சிவராமன் விசாரணை நடத்தினார். மேலும் இதுதொடர்பான வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story