காஷ்மீரில் 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 818: மத்திய அரசு தகவல்


காஷ்மீரில் 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 818:  மத்திய அரசு தகவல்
x

காஷ்மீரில், கடந்த 2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவங்களின் எண்ணிக்கை 579 ஆகும்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள பாதுகாப்பு சூழல் பற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் இன்று அளித்துள்ள பதிலில், கடந்த 2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவங்களின் எண்ணிக்கை 579 ஆகும்.

இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 818 ஆகும். அவர்களுடனான மோதலில், 247 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். எனினும், இந்த காலகட்டத்தில், லடாக் யூனியன் பிரதேசத்தில் எந்தவித பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, அரசானது, பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புதன்மை கொள்கையை கொண்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் முக்கியத்துவம் பெறும் வகையில், முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பேசியுள்ளார்.


Next Story