வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்


வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
x
தினத்தந்தி 3 April 2024 3:21 AM GMT (Updated: 3 April 2024 3:28 AM GMT)

வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. நாளை (இன்று) காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போடப்போகிறோம்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story