கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழர்கள்


கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழர்கள்
x

Image Courtesy : @siddaramaiah twitter

பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள அல்சூர் ஏரி கரையில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. அங்கு காங்கிரசார் சார்பில் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிஸ்வான் அர்சத், ஹாரிஸ், அகண்ட சீனிவாச மூர்த்தி, கே.ஜே.ஜார்ஜ், உள்ளிட்டோரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த திருவள்ளுவர் தின விழாவில் பெங்களூரு வாழ் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் இவ்விழாவில் பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், ஆடல், பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.




Next Story