புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Nov 2023 12:00 AM IST (Updated: 1 Nov 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும்.

புதுச்சேரி,

புதுவை விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும் கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும். கல்லறை திருநாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கையில், புதுவை விடுதலை நாள் மற்றும், கல்லறை திருநாளை முன்னிட்டு புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.


Next Story