திரினாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தின் பெயர், முகப்பு படத்தை மாற்றிய ஹேக்கர்கள்
திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் பெயர் மற்றும் முகப்பு படம் மாற்றப்பட்டிருந்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அந்த டுவிட்டர் பக்கத்தின் பெயர் மற்றும் முகப்பு படம் மாற்றப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பக்கத்தில் எந்த பதிவுகளும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் பேசி வருவதாகவும், விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும் எனவும் திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் தெரிவித்தார். இந்நிலையில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டு, அதில் கட்சியின் அறிவிப்புகள் மீண்டும் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story