கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?; போலீசாருக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி

கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?; போலீசாருக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி
x

முகமது பாசில், மசூத் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் போலீசாருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் மந்திரி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவமொக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வீரசாவர்க்கர் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 பேர் படுகொலை

இந்த நிலையில் இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார், கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். இந்த விவாகரத்தில் அரசும், போலீசாரும் அவசரம் காட்டக்கூடாது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேபோல் அடுத்தடுத்து முகமது பாசில், மசூத் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

அதாவது பிரவீன் நெட்டார் கொலைக்கு முன்பு மசூத்தும், அதன்பிறகு முகமது பாசிலும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்குகளில் கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஏன்? என்று அரசும், போலீசாரும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story