டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர் வழிபாடு


டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர் வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2023 2:08 AM GMT (Updated: 10 Sep 2023 4:36 AM GMT)

டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு செய்தார்.

டெல்லி,

ஜி20 உச்சிமாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு தலைமை வகிக்கும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜி20 உச்சிமாநாடு இன்று 2வது நாளாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாடு தலத்திற்கு இன்று காலை சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அங்கு மத வழிபாடு செய்தார். ரிஷி சுனக் உடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வழிபாடு செய்தார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story