லூடோ கேமில் மலர்ந்த காதல்: உ.பி.இளைஞரை நேபாளத்தில் மணந்து கர்நாடகாவில் குடியேறிய பாக். பெண் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு...!


லூடோ கேமில் மலர்ந்த காதல்: உ.பி.இளைஞரை நேபாளத்தில் மணந்து கர்நாடகாவில் குடியேறிய பாக். பெண் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு...!
x

ஆன்லைன் லூடோ கேமில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சண்டிகர்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் முலாயம் சிங். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்துவந்துள்லார்.

இதனிடையே, முலாயம் சிங் செல்போனில் ஆன்லைன் லூடோ கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆன்லைனில் குழுவாக இணைந்து விளையாடும் லூடோ விளையாட்டின்போது முலாயம் சிங்கிற்கு பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதான இக்ரா ஜிவானி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் இருவரும் இணைந்து லூடோ விளையாடியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

பின்னர், முலாயம் சிங்கும் இக்ரா ஜிவானியும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரும் கில்லாடி திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து இக்ரா ஜிவானியும், இந்தியாவில் இருந்து முலாயம் சிங்கும் நேபாள நாட்டிற்கு சென்றுள்ளனர். நேபாளத்தில் வைத்து இக்ரா ஜிவானியும் - முலாயம் சிங்கும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் தனது மனைவியான பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜிவானியை கணவரான இந்தியாவின் முலாயம்சிங் நேபாளத்தில் இருந்து பீகார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்துவந்தார்.

பின்னர், இக்ரா ஜிவானியை தான் காவலாளியாக வேலை செய்துவரும் பெங்களூருவின் ஜுனசந்த்ரா பகுதியில் வாடகை வீட்டு எடுத்து முலாயம்சிங் குடியேறியுள்ளார்.

பின்னர், இக்ரா ஜிவானிவுக்கு முலாயம்சிங் ஆதார் அட்டையும் எடுத்துள்ளார். உண்மையான பெயரான இக்ரா ஜிவானிக்கு பதிலாக ரவா என்ற பெயரில் முலாயசிங் ஆதார் அட்டை எடுத்துள்ளார். அந்த ஆதார் அட்டையில் ரவா தனது மனைவி என்று முலாயம்சிங் குறிப்பிட்டுள்ளார். பின்னர், இக்ரா ஜிவானி இந்திய பாஸ்போர்ட்டிற்கும் விண்ணப்பித்துள்ளார்.

இதனிடையே, ரவா என்று பெயரில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் இக்ரா ஜிவானியை போலீசார் கடந்த மாதம் 23-ம் தேதி அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இக்ரா ஜிவானி பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். அதேவேளை, இக்ரா தனது வீட்டில் இஸ்லாமிய மத வழிபாடு செய்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்தவராக கூறப்பட்ட நிலையில் அவர் இஸ்லாமிய மத வழிபாட்டு முறைகளை பின்பற்றியதால் சந்தேகமடைந்த முலாயம்சிங் வசிக்கும்பகுதியை சேர்ந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதேவேளை, பெங்களூருவில் இருந்து பாகிஸ்தானுக்கு உள்ள தனது குடும்பத்தினரை இணையதளம், செல்போனில் தொடர்புகொள்ள ஜிவானி முயற்சித்தது இந்திய புலனாய்வு துறையின் கண்காணிப்பிற்குள் சென்றது.

இதுகுறித்து, புலனாய்வு துறை கர்நாடக உளவுத்துறைக்கு எச்சரிக்கை கொடுத்தது. மேலும், முலாயம்சிங்கின் அக்கம்பக்கத்தினரும் ஜிவானி குறித்து போலீசில் தெரிவித்தனர்.

இந்த தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார் பெங்களூருவின் ஜுனசந்த்ரா பகுதியில் வாடகை வீட்டு ரவா என்ற போலி பெயரில் கணவர் முலாயம்சிங் உடன் தங்கி இருந்த பாகிஸ்தான் பெண் இக்ரா ஜிவானியை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜிவானியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண் இக்ரா ஜிவானி நேற்று இரவு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பஞ்சாப்பின் அடாரி எல்லை வழியாக இக்ரா பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இக்ரா ஜிவானி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் ஆன்லைன் லூடோ கேமில் பழகி நேபாளத்தில் திருமணம் செய்து பாகிஸ்தான் காதலி இக்ராவை பெங்களூருவில் சட்டவிரோதமாக குடியேறிற்றிய உத்தரபிரதேச இளைஞர் முலாயம் சிங்கின் காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.


Next Story